;
Athirady Tamil News

வங்காளதேச விடுதலைப் போர் வெற்றி நாள் – டிச.16- 1971..!!

0

வங்காளதேச விடுதலைப் போர் 1971-ல் மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கும் இடையில் நடந்தது. இப்போரில் இந்தியாவும் முக்தி பாஹினியும் (வங்காளதேச விடுதலை இராணுவம்) வென்று வங்காளதேசம் உருவாக்கப்பட்டது. மொத்தத்தில் 90,000 போர் கைதிகள் சரணடைந்தனர்.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1598 – கொரிய, ஜப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது.
1653 – சேர் ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து நாடுகள் அடங்கிய பொது நலவாயத்தின் தலைவரானார்.
1707 – ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.
1773 – அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம்- அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.
1835 – நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் 530 கட்டிடங்கள் சேதமடைந்தன.
1857 – இத்தாலியின் நேப்பில்சில் இடம்பெற்ற 6.9 நிலநடுக்கம் 11,000 பேரைக் கொன்றது.
1920 – சீனாவில் 8.6 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 2,00,000 பேர் கொல்லப்பட்டனர்.
1922 – போலந்து அரசுத்தலைவர் கேப்ரியல் நருடோவிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × three =

*