;
Athirady Tamil News

ஐதேக ஆதரவாளர்கள் யாழ்.நகரில் வெடிகொளுத்திக் கொண்டாட்டம்!! ( “படங்களுடன் செய்தி”)

0

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் வெடி கொளுத்தி கொண்டாட்டினர்.

இன்று(16) முற்பகல் 11.16 மணிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 5ஆவது முறை பிரதமராகப் பதவியேற்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவியேற்றதை அடுத்து ஐந்து சந்தி மற்றும் யாழ்ப்பாண நகரப்பகுதியில் ஒன்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான கே.எம் நிலாம் கலந்து கொண்டதுடன் புதிய ஆட்சி மக்களின் மறுமலர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 8 =

*