;
Athirady Tamil News

கேட்போர் கூடத்தை உத்தியோகபூர்வமாக சிறிசேன அவர்கள் திறந்து வைத்தார்.!! ( “படங்களுடன் செய்தி”)

0

இலங்கை இராணுவத்திற்கும் சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் இடையிலான பல வருட நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை கல்வியியற் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்தை (15) ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் திறந்து வைத்தார்.

கேட்போர் கூடத்தை உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திடம் கையளிப்பதற்கான ஆவணங்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சூ ஆன் ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

தியத்தலாவை இராணுவக் கல்வியியற் கல்லூரியின் கட்டளை தளபதி பிரிகேடியர் பிரியந்த சேனரத்ன ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கினார்.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, முன்னாள் பாதுகாப்பு பதவிநிலை பிரதானி ஜகத் ஜயசூரிய ஆகியோரும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், விசேட அதிதிகள் மற்றும் பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகளின் பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 13 =

*