;
Athirady Tamil News

அரச அதிபராக நிச்சயம் வருவேன் – தமிழ் மக்களுக்கு சிறந்த சேவையைத் தருவேன் – வர்த்தகப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி..!! (வீடியோ)

0

நிச்சயமாக அரச அதிபர் பதவிக்கு வந்து தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு சேவையைச் செய்வேன் என்று க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் வர்த்தகப் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவி சாம்பவி ஜெயதிலக தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவியான ஜே.சாம்பவி, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிந்தியடையவில்லை என்ற தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்று தெரிவித்தார்.

அதனால் கஷ்டப்பட்டு பயின்று க.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ சித்திகளைப் பெற்றதுடன், உயர் தரத்தில் 3 ஏ சித்திகளுடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்தேன் என்று மிக்க மகிழ்வுடன் குறிப்பிட்டார்.

“அரச அதிபராக வரவேண்டும் என்பதே எனது சின்ன வயது முதலான ஆசை. நிச்சயமாக நான் அரச அதிபராக வருவேன். வந்து என்னுடைய தமிழ் மக்களுக்கு சிறந்த சேவை செய்வேன். என்னைப் போன்றவர்களின் கல்விக்காக நிறைய சேவையை செய்யவேண்டும் என்பதே குறிக்கோள்” என்றும் மாணவி சாம்பவி ஜெயதிலக தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + eight =

*