;
Athirady Tamil News

மேற்கு வங்காளம் விவசாயிகளுக்கு தாராளமயமான சலுகைகள் – மம்தா பானர்ஜி புத்தாண்டு பரிசு..!!

0

மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மேற்கு வங்காள அரசு விவசாயிகளுக்கு என்றும் துணையாக இருக்கும். விவசாயிகளுக்காக இரண்டு திட்டங்களை செயல்படுத்த உள்ளோம்.

முதலில், விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு தொகையை மாநில அரசே செலுத்தும். இதுபோல், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் இறந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.

முத்தலாக் விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவான நிலையை எடுப்பதில் உரிய கவனம் செலுத்தி வருகிறோம். எங்கள் கட்சி எம்.பியான சுதீப் பந்தோபத்யாய இதுதொடர்பாக ஏற்கனவே பேசியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × two =

*