;
Athirady Tamil News

குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த வாலிபர் மர்ம மரணம்..!!

0

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த ஸ்ரீரெங்கம் பட்டியை சேர்ந்தவர் மணி (வயது31). இவர் நண்பர்களுடன் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்தார். இந்த நிலையில் இன்று காலை இவர் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மணி பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி எப்படி இறந்தார்? அவரது சாவுக்கு காரணம் என்ன? என்று விசாரித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × four =

*