தடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி வாழைப்பழங்களை விற்பனை – நீதிமன்றில் வழக்கு தாக்கல்!!!

தடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி வாழைப்பழங்களை விற்பனை செய்தார் எனும் குற்றம் சாட்டி வியாபாரி ஒருவருக்கு எதிராக சுகாதார பரிசோதகர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
சாவகச்சேரி பொதுசந்தையில் வாழைக்குலைக்கு தடை செய்யப்பட்ட மருந்தினை விசிறி பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக அப்பிரதேச சுகாதார பரிசோதகர் பி.தளிர்ராஜ்க்கு பொதுமக்கள் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் சுகாதார பரிசோதகர் அங்கு சென்ற போது குறித்த வியாபாரி தடை செய்யப்பட்ட மருந்தினை வாழைக்குலைக்கு விசிறிக்கொண்டு இருந்த போது கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்.
அதனை அடுத்து குறித்த வியாபாரிக்கு எதிராக சுகாதார பரிசோதகர் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”