பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய லீசிங் நிறுவன ஊழியர்களுக்கு நேர்ந்த கதி!! (படங்கள், வீடியோ )

வவுனியா பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய இரு லீசிங் நிறுவன ஊழியர்கள் நேற்றையதினம் (02.01.2018) நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டு பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் அதிவேகத்தினை கணிக்கும் கருவியுடனான பொலிஸ் உருவபொம்மையோன்று வவுனியா ஏ9 வீதியில் வைக்கப்பட்டிருந்தது.
அந்த உருவபொம்பைக்கு இலஞ்சம் வழங்குவது போன்று வீடியோ செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட லீசிங் நிறுவனத்தில் பணியாற்றும் இரு ஊழியர்களை நேற்றையதினம் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆயர்படுத்தியுள்ளனர்.
இதன் போது குறித்த இரு நபர்களுக்கும் பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்
தற்போது அவ்விடத்திலிருந்த பொலிஸ் உருவபொம்மையினை பொலிஸார் அகற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”