;
Athirady Tamil News

அதிபர் இன்மையால் கல்விதுறை கீழ்நோக்கிசெல்வதாக பெற்றோர்கள்,பழையமாணவர்கள் விசனம்!! (படங்கள்)

0

வவுனியாவடக்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட எல்லைகிராமமான கோவில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலத்திற்கு கடந்த ஒருவருடாமாக அதிபர் நியமிக்கபடவில்லை என்று தெரிவித்து பெற்றேர்கள், பழையமாணவர்கள் நேற்றயதினம்(2) வவுனியா வடக்கு வலயகல்விபணிப்பாளருக்கு மகயர் ஒன்றை கையளித்திருந்தனர்….

குறித்த மகயரில்…..

கடந்த ஒருவருடமாக எமது பாடசாலைக்கு அதிபர்நியமிக்கபடவில்லை. முன்னர் கடமையாற்றிய அதிபர் இடமாற்றம் பெற்றுசென்றிருந்தாலும் அவரது கட்டுப்பாட்டிலேயே பாடசாலை தற்போதும் இயங்கிவருவதாக பாடசாலைசமூகம் எமக்கு கூறுகின்றது. தற்போது பாடசாலைக்கு பொறுப்பாக இருக்கும் ஆசிரியர் பாடசாலையின் மாணவர்களையோ,உபகரணங்களையோ சரியான முறையில் கவனிப்பதில்லை..பாடசாலையின் சிற்றுழியர்,காவலாளி போன்றோர் உரியமுறையில் தமது கடமைகளை மேற்கொள்வதில்லை.

பாடசாலையின் ஆசிரியர்கள் இருபிரிவாகசெயற்பட்டுவருகின்றனர். எமது பாசாலைபின்தங்கியபகுதியில் காணப்பட்டாலும் கடந்தகாலங்களில் பல்வேறுதுறைகளிலும் வெற்றிநடைபோட்டுவருகின்றமை யாவரும் அறிந்ததே தற்போது அதில் வீழ்சிஏற்பட்டுள்ளது. இவைஅனைத்திற்கும் காரணம் பாடசாலைக்கு நிரந்தரமான அதிபர்ஒருவர் இல்லாமையே என்பதை எம்மால் ஊகிக்கமுடிகின்றது. குறித்தவிடயம் தொடர்பாகஉரிய அதிகாரிகளிற்கு பலமுறைதெரிவித்தும் நடவடிக்கைஎடுக்கப்படவில்லை.
வலயகல்வி பணிப்பாளர் எமக்கு ஒரு வாரத்திற்குள் நல்லதீர்வுவழங்காவிட்டால் நாம் மேலதிகநடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று அந்த மகயரில் தெரிவிக்கபட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக தனது மேலதிகாரிகளிற்கு தெரியபடுத்தவுள்ளதாக வவுனியா வடக்கின் வலயகல்வி பணிப்பாளர் சு. அன்னமலர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 1 =

*