;
Athirady Tamil News

அட பரிதாபமே.. அஜீத் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்.. சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்!! (வீடியோ)

0

நடிகர் அஜீத்தின் 60 அடி உயர கட் அவுட்டின் மேல் உட்கார்ந்து பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்த ரசிகர்கள், திடீரென கட் அவுட் சரிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று விஸ்வாசம் படம் வெளியாகியுள்ளது. இதனால் நடிகர் அஜீத்குமார் தரப்பு ரசிகர்கள் அனைத்து திரையரங்குகள் முன்பும் பட்டாசுகளை வெடித்து, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார்கள்.

மாலைகள் இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை காண நள்ளிரவு முதலே ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கூடிவிட்டனர். எப்போதுமே அஜீத் படம் வெளியானால் அவரது ரசிகர்கள் கட்அவுட்டுக்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் செய்து, சூடம் காட்டுவார்கள்.

60 அடி உயரம் 60 அடி உயரம் அப்படித்தான் திருக்கோவிலூர் ஸ்ரீனிவாசா திரையரங்கில் விஸ்வாசம் படத்தை வரவேற்கும் விதமாக 60 அடி உயரத்துக்கு அஜீத்தின் உருவ கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது. பாலாபிஷேகம் இதற்கு பாலாபிஷேகம் செய்ய ரசிகர்கள் பலர் கூடினர்.

அதில் ஒருசிலர் கட் அவுட் மீது ஏறி மாலை அணிவித்தனர். பிறகு பாலாபிஷேகம் செய்து கொண்டிருந்தபோது, மேலும் சில ரசிகர்களும் அதே கட் அவுட்டில் ஏற ஆரம்பித்தார்கள். அப்போது இதனால் பாரம் தாங்காமல் அஜீத் கட் அவுட் அப்படியே சரிந்து விழுந்தது. 6 பேர் படுகாயம் 6 பேர் படுகாயம் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் கட் அவுட் சரிய சரிய ஒவ்வொருவராக கீழே குதிக்க ஆரம்பித்தார்கள். இதனால் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அட பரிதாபமே.. அஜீத் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்.. சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்

#Flashnews : அட பரிதாபமே.. அஜீத் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்.. சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்#ViswasamFDFS #Thala #Ajith #Fans #Viswasam

Gepostet von Tamil Filmibeat am Mittwoch, 9. Januar 2019

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + twenty =

*