;
Athirady Tamil News

புதிய அரசாங்கத்தின் ஊடாக மேலும் 105 தனிவீட்டு திட்டம் மக்களிடம் கையளிப்பு!! (படங்கள்)

0

புதிய அரசாங்கத்தின் ஊடாக மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் 105 தனிவீட்டு திட்டம் 10.01.2019 திறப்பு விழா செய்யபட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கபட்டது.

இதன் போது திம்புள்ள பத்தன பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மவூன்ட்வோனன் தோட்டபகுதிக்கு 50தனி வீடுகளும் போகாவத்த தோட்டபகுதிக்கு 55தனி வீடுகளும் அமைச்சர் பழினி திகாம்பரம் அவர்களின் 52 பிறந்ததினத்தை முன்னிட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கபட உள்ளது.

பசுமை புமியின் வேலைதிட்டத்தின் கிழ் வீடு ஒன்றுக்கு ஏழுபேச்சர்ஸ் காணியோடு இந்த வீடமைப்பு திட்டம் அமைக்கபட்டுள்ளதோடு அனைத்து தனி
வீட்டுத்திட்டத்திற்க்கு குடிநீர் வசதி மின்சாரம் மலசலகூட வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளுடன் ஒரு விட்டு திட்டததிற்க்கு 10இலச்சம் ருபா செலவில் புனரமைக்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இந் நிகழ்வில் அமைச்சர் உட்பட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் மயில்வாகனம் திலகராஜ் மத்திய மாகாணசபை உருப்பினர்களான சிங்பொன்னையா
சோ.ஸ்ரீதரன்இ சரஸ்வதி சிவகுரு எம்.உதயகுமார் எம்.ராம் பிரதேசசபை உருப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

DCIM/101MEDIA/DJI_0051.JPG

DCIM/101MEDIA/DJI_0048.JPG

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five + ten =

*