;
Athirady Tamil News

யாழில் பார்க் யூன் கோ எனும் சர்வதேச பாடசாலை ஆரம்பம்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் பார்க் யூன் கோ எனும் சர்வதேச பாடசாலை முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த நிகழ்வில் மகா போதி சங்கம் மற்றும் யோசிதா அறக்கட்டளையின் தலைவர் வணக்கத்திற்குரிய பனாஹல உபதிஸ்ஸ தேரர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.

இந்தப் பாடசாலைக்குரிய கட்டுமானப் பணிகளை மகா போதி அறக்கட்டளை நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

பிரதானமாக ஆங்கில மொழி அறிவினை விருத்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள இப்பாடசாலை யாழ்ப்பாணத்திலும் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப்பாடசாலையில் மாணவர்களை இணைத்தல் மற்றும் கல்வி நடவடிக்கைகள் சம்பிரதாய பூர்வமாக மத தலைவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தநிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மகாபோதி சங்கம் மற்றும் யோசிதா அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கும் போது, எதிர்காலத்தில் எங்களுக்கு இவ்வாறான சந்தர்ப்பங்கள் கிடைத்தால், மேலும் பாடசாலைகள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுப்போம்.

இந்தப் பாடசாலை இங்கு ஆரம்பித்ததில் இந்தப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு நன்மை கிடைக்கும். சகவாழ்விற்கு பாரிய ஒரு சாத்தியமாக அமையுமென நான் நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 1 =

*