;
Athirady Tamil News

வவுனியா பிரதே செயலகத்தின் மார்கழி இசை விழாவும், விருது வழங்கும் நிகழ்வும்!! (படங்கள்)

0

வவுனியா பிரதேச கலாசாரப் பேரவையும் வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து நடாத்திய மார்கழி இசை விழா 2018 உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரியதர்சினி சஜீவன் தலைமையில் பிரதேச செயலகத்தின் கலாசார மண்டபத்தில் இன்று (11) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.
கலாபூசணம் திருமதி.தேவி மனோகரி நாகேஸ்பரன் நினைவாக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சென்னை செம்மொழி ஆய்வு மையத்தை சேர்ந்த முது முனைவர் ஜெ.அரங்கராஜ் கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வில் தமிழ் மொழி வாழ்த்து, இசை அரங்கம் என்பன இடம்பெற்றதுடன் நினைவுப் பேருரையை தமிழ் மணி அகளங்கன் நிகழ்த்தினார்.
சங்கீத கலாவித்தகர் திருமதி இந்திராணி சண்முகலிங்கத்திற்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு கௌரவம் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கலாபூசணம் க.கனகேஸ்வரன் லயஞான மனோகரன் என்ற சிறப்பு விருதையும், கலாபூசணம் க.விமலலோஜினி லயஞான மனோகரி என்ற சிறப்பு விருதையும், நிருத்தியவாணி திருமதி.வீ. சூரியயாழினி நிருத்திய மனோகரி என்ற சிறப்பு விருதும் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

நிகழ்வில் கலாபூசணம் திருமதி.தேவி மனோகரி நாகேஸ்பரன் நினைவாக நினைவு மலர் ஒன்று அவரது குடும்ப உறுப்பினர்களால் வெளியீடு செய்து வைக்க முதல் பிரதியை சென்னை செம்மொழி ஆய்வு மையத்தை சேர்ந்த முது முனைவர் ஜெ.அரங்கராஜ் பெற்றுக்கொண்டார்.

நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் முத்து இராதகிருஸ்ணன், ஓய்வு நிலை பிரதி கல்வி பணிப்பாளர் கந்தையா கனகேஸ்வரி, வவுனியா தேசிய கல்வியல் கல்லாரி முது நிலை இசை விரிவுரையாளர் திருமதி அருந்ததி இரவீந்திரன், வவுனியா பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ.பிரதீபன் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + four =

*