;
Athirady Tamil News

தனியார் பேருந்து ஒன்றும் சிறிய பாரஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து!! (படங்கள்)

0

தனியார் பேருந்து ஒன்றும் சிறிய பாரஊர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாரஊர்தி பிரதான வீதியில் குடைசாயந்து விபத்து

மஸ்கெலியா நகரில் இருந்து அட்டன் பகுதியை நோக்கி பயனித்த சிறய ரக பாரஊர்தி ஒன்றும் அட்டனில் இருந்து நல்லதன்னி பகுதியை நோக்கி பயனித்த தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் சிறியரக பாராஊர்தி அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியூள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பபவம் 11.01.2019.வெள்ளிகிழமை அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியில் இடம் பெற்றுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் காரனமாக எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனவூம் விபத்துக்குள்ளான சிறிய ரக பாராஊர்திக்க மாத்திரம் பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதேவலை அட்டனில் இருந்து நல்லதன்னி பகுதிக்கு சென்ற தனியார் பேருந்து முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திகொண்டு செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவூம் அதிக வேகம் காரனமாகவூம் அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் அதிகளவிலான விபத்துக்கள் இதற்க்கு முன்பும் இடம் பெற்ற சம்பவங்கள் பதிவாகியூள்ளமை குறிப்பிடதகக்து.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 13 =

*