;
Athirady Tamil News

வாடகைத் தாய் மூலம் பிறந்த இரட்டைக் குழந்தைகள்: கனேடிய தந்தைக்கு ஏற்பட்ட சிக்கல்..!!

0

இத்தாலியில் பிறந்து கனடா குடியுரிமை பெற்ற ஒருவர், வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளை கனடாவுக்கு கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள சட்ட சிக்கலையடுத்து ஒரு மாதம் வரை அலைக்கழிக்கப்பட்டார்.

இத்தாலியில் பிறந்ததால் கனடா குடியுரிமையை ஜோசப் பெற்றுக் கொண்டாலும், அவரது குழந்தைகள் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் பிறந்ததால் கனடா சட்டப்படி அவர்களுக்கு ஜோசப்பின் குடியுரிமை தானாகவே வந்து விடாது.

கென்ய நகரம் ஒன்றில் 81,000 டொலர்கள் செலவு செய்து இந்திய செயற்கை கருத்தரிப்பு நிலையம் ஒன்றின் உதவியுடன் வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானார் ஜோசப்

கிழக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் குறைவு மற்றும் கட்டணமும் குறைவு என்பதால் கென்யாவைத் தேர்ந்தெடுத்தார் ஜோசப்.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதிலுள்ள சிக்கல்கள் என்னென்ன என்பதைக் குறித்து தூதரகம், மருத்துவமனை மற்றும் வழக்கறிஞர்களிடமும் கலந்தாலோசித்த பின்னரே கென்யாவைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

குழந்தைகள் பிறந்து அவர்களை தனது வீட்டுக்கு கொண்டு வரும் நேரத்தில், கனடா சட்டப்படி அவர்கள் கனடா குடிமக்களாக கருதப்பட மாட்டார்கள் என்ற செய்தி சொல்லப்பட, ஜோசப்க்கு என்ன செய்வதென்று தெரியவில்லை

ஒரு மாத போராட்டத்திற்குப்பின் இந்த வாரம் அவரது குழந்தைகளுக்கு விசா வழங்கப்பட்டு தங்கள் தந்தையுடன் சேர்ந்திருக்கிறார்கள்.

இப்போதைக்கு குழந்தைகளின் வாழிட உரிமை குறித்து எதுவும் தெளிவாக தெரியாத நிலையில், அவர்களுக்கு குடியுரிமை பெறுவதற்கான பணிகளை தொடங்கிவிட்டார் ஜோசப். மியா மற்றும் ஸ்டெல்லா என்று பெயரிட்டுள்ள தனது குழந்தைகளுடன் வீடு வந்து சேர்ந்தது கனவு போல் இருப்பதாக தெரிவிக்கிறார் ஜோசப்.

நான் என் குழந்தைகளை வளர்க்கப்போகிறேன், சட்ட சிக்கல், தூதரகங்களுக்கு அலைச்சல், வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள் என்று எதைக் குறித்தும் கவலைப்படாமல், என் குழந்தைகளுடன் நேரம் செலவிடப்போகிறேன் என்கிறார் இந்த பாசமிகு தந்தை

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − eleven =

*