;
Athirady Tamil News

வவுனியாவில் 50 போத்தல் வடிசாராயத்துடன் இருவர்கைது!!கோடாவும் மீட்பு!!

0

வவுனியா செட்டிகுளம் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட மயில்முட்டையிட்ட குளம் பகுதியில் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யபட்டுள்ளதாக செட்டிகுளம் போலிசார் தெரிவித்தனர்.

நேற்றுமுன்தினம் மாலை 4 மணிக்கு செட்டிகுளம் போலீசாருக்கு கிடைத்தரகசிய தகவலின் அடிப்படையில் மயில்முட்டையிட்ட குளம் பிரதசேத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தேடுதல் நடாத்தியபோதே குறித்த நபர்கள் கைதுசெய்யபட்டனர்.

கைதுசெய்யபட்டவர்களிடம் இருந்து 50 போத்தல் வடிசாரயபோத்தல் கைப்பற்றபட்டதுடன் அதனை உற்பத்தி செய்யபயன்படும் கோடா 180 லீட்டரும், நவீன உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யபட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றயதினம் நீதி மன்றில் ஆயர்படுத்தபடவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × four =

*