;
Athirady Tamil News

“கருத்துக்களால் களமாடுவோம்” எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு !! (படங்கள், வீடியோ)

0

“கருத்துக்களால் களமாடுவோம்” எனும் தொனிப்பொருளிலான அரசியல் கருத்தரங்கு யாழில் ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் அரசியல் ஆர்வலர் குழாமின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இந்நிகழ்வு ஆரம்பமானது.

நிகழ்ச்சித் தொகுப்பாளராக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்.

மங்கள விளக்கேற்றலுடன், விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன், அரசியல் களம் ஆரம்பமானது.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையுரை ஆற்றினார்.

இதனைத் தொடர்ந்து, பிரம்மஸ்ரீ ப.மனோகரக்குருக்கள் மற்றும் தென்னிந்திய திருச்சபை பேராயர் டானியல் தியாகராசா உட்பட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பொறியியல் பீடம் கலாநிதி சுப்பிரமணியம் சிவகுமார், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, மூத்த ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கவுள்ளனர்.

இவர்களின் கருத்துரைகளுக்கு ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் பதிலுரைகளை வழங்கவுள்ளார்.

இந்நிகழ்வில், மதகுருமார்கள், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், கம்பவரிதி ஜெயராமன் உட்பட அரசியல் பிரமுகர்கள், அரசியல் ஆய்வாளர்கள், அரசியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

கருத்துக்களால் களமாடுவோம்" அரசியல் கருத்தரங்கு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று பிற்பகலில் இடம்பெற்றது. சுமந்திரனின் முழுமையான உரை

Gepostet von Yarl Theepan am Samstag, 12. Januar 2019

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × one =

*