;
Athirady Tamil News

மோடியால் ஆங்கிலத்தில் ஒருவார்த்தை கூட பேச முடியாது- மம்தா பானர்ஜி கிண்டல்..!!

0

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாக பெங்காலி மொழி இணையதளம் ஒன்றில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி பொதுக்கூட்டங்களில் பேசும்போது நிறைய பேசுகிறார். நிறைய வி‌ஷயங்களை தெரிந்தவர் போல சரளமாக உரையாடுகிறார்.

ஆனால் அவரால் ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாது. அவரது ஆங்கில பேச்சு முறையானதாக இருப்பது இல்லை.

முக்கிய கூட்டங்களில் அவர் பேசும்போது அவருக்கு உதவுவதற்காக டெலிபிராம்டர் வைக்கப்படுகிறது. அந்த டெலிபிராம்டரை பார்த்துதான் அவரால் ஆங்கிலத்தில் வேகமாக பேச முடிகிறது. டெலிபிராம்டர் இல்லாமல் அவரால் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட வேகமாக பேச முடியாது.

அவர் ஆங்கிலத்தில் பேசும் போது நீங்கள் நன்றாக கவனித்து பார்த்தால் அவர் அடிக்கடி டெலிபிராம்டரை பார்ப்பது தெரியும். டெலிபிராம்டர் திரையில் உள்ளதை அப்படியே அவர் படிப்பார். அது அவர் சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றுவது போல் உள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து ஊடக துறையில் இருப்பவர்களுக்கும் இது நன்றாக தெரியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*