;
Athirady Tamil News

யாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் காயம்!!

0

யாழில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியையும் மானிப்பாய் வீதியையும் இணைக்கும் குளப்பிட்டி வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் வண்ணார் பண்ணை பெருமாள் கோவிலடியைச் சேர்ந்த கிருஸ்ணா என்ற இளைஞரே காயமடைந்தவராவார்.

குளப்பிட்டி வீதியூடாக கே.கே.எஸ் வீதியை நோக்கி சென்று கொண்டிருந்த ஓட்டோ வீதியில் சென்ற வேறொரு வாகனத்திற்கு வழிவிட்டுக் கொடுத்த போது அருகிலிருந்த மதிலுடன் திடிரென மோதிக் கொண்டுள்ளது.

இதன் போது ஆட்டோவைச் செலுத்தி வந்த சாரதி பலத்த காயங்களுங்குள்ளானார். இதனையடுத்து ஆட்டோtpy; வந்திருந்த அவரது உறவினர்களும் அப்பகுதியில் சென்றவர்களும் இணைந்து காயமடைந்தவரை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசென்றனர். இதே வேளை ஆட்டோவில் வந்த ஏனைய இரண்டு பேரும் சிறு காயங்களுக்கும் உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − 10 =

*