;
Athirady Tamil News

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்திய பக்தர்களுக்கு ஆயர் அழைப்பு!!

0

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவில் பங்குக்கொள்ளுமாறு இந்திய பக்தர்களுக்கு, யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா இடம்பெறுகின்றது.

இந்நிலையில் இந்த திருவிழாவில் பங்கேற்க இந்திய, இலங்கை நாடுகளைச் சேர்ந்த பக்தர்களுக்கு யாழ்பானம் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை திருவிழா குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மட்டத்திலான முதல் கட்ட ஆய்வு கூட்டம் யாழ்பாணத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*