;
Athirady Tamil News

ஊடகச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்!!

0

நாட்டில் ஊடகச் சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும். கடந்த வாரம் சில ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கண்டிக்கதக்கதோடு, அவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் இடம்பெறாதும் இருக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் சக்தி, சிரச மற்றும் மவ்பிம உள்ளிட்ட சில ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. இது கவலையளிக்கும் விடயமாகும், எந்த நாட்டில் ஊடகத்துறைக்கும், ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பும் சுதந்திரமும் வழங்கப்படுகிறதோ அந்த நாட்டில் ஜனநாயகம், பாதுகாக்ப்படுவதோடு, நல்லாட்சியும் உறுதிசெய்யப்படுகிறது. அத்தோடு மக்கள் நலன் மேம்பாடுகளும் அதிகரிக்கும் அந்த வகையில் ஊடகத்துறையின் பாதுகாப்பையும், சுதந்திரத்தையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையும் பொறுப்புமாகும். எனத் தெரிவித்த அவர்.

நல்லாட்சியில் ஊடகச் சுதந்திரம் குறித்தும் ஊடகவியலாளர்கள் நலன்கள் குறித்தும் அரசு அதிக கவனம் செலுத்தியுள்ளது என அறிவித்தல்கள் மாத்திரமே வெளியாகின்றனவே தவிர செயற்பாடுகள் பல அவற்றுக்கு எதிராகவே உள்ளன. ஊடககங்கள் உண்மைக்கு புறம்பாகவோ அல்லது சட்டத்திற்கு மாறாகவோ செயற்படுகின்ற போது சட்டத்தின் உதவியை நாடவேண்டுமே தவிர ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் செயற்படுகள் கொண்டு செல்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கண்டிக்கதக்கது. எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + 3 =

*