;
Athirady Tamil News

புதிய களனி பாலத்திற்கு தற்காலிக பூட்டு!!

0

புதிய களனி பாலத்தின் நுழைவாயில் இருந்து களனி திஸ்ஸ சுற்றுவட்டம் வரையிலான வாகன போக்குவரத்து நாளை (15) மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதனடிப்படையில் நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர் மின்னழுத்தமுள்ள மின் இணைப்பு ஒன்றை வழங்குவதற்காக இவ்வாறு குறித்த வீதி மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பேலியகொட வெளிச்சுற்றுகையை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + three =

*