;
Athirady Tamil News

சாவகச்சேரி பொலிஸாரின் அடுத்தடுத்த அதிரடி போதைப்பொருள் வியாபாரிகள் நால்வர் கைது.!!

0

தென்மராட்சி நாவற்குழி பகுதியில் வைத்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களை சாவகச்சேரி பொலிஸார் நேற்று இரவு 11.00 மணிக்கு கைது செய்துள்ளனர்.

நாவற்குழி பகுதியில் வைத்து தினமும் போதைப்பொருள் வியாபாரம் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் ஜே.ஜெயறோசனுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இத்தகவலையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி போதைப்பொருள் வியாபாரம் நடைபெறுகின்ற இடத்தினை அடையாளம் கண்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவும் நாவற்குழி பகுதியில் குறித்த இடத்தில் போதைப்பொருள் வியாபாரம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் துரிதமாக செயற்பட்ட சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் தலைமையிலான குழுவினர் போதைப்பொருள் வியாபாரம் நடைபெற்ற இடத்தினை சுற்றிவளைத்தனர். பொலிஸாரைக் கண்டதும் போதைப்பொருள் வியாபாரிகள் தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர்.

எனினும் பொலிஸார் நான்கு சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர். இதன்போது கைதுசெய்யப்பட்டவர்களின் உடைமையில் இருந்து ஒரு தொகுதி குடு ரக போதைப்பொருளும் எழுபதாயிரம் ரூபா பணத்தினையும் மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் யாழ்ப்பாணத்தினையும் ஒருவர் கிளிநொச்சியையும் சேர்ந்தவர்கள் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் நால்வரும் இன்றைய தினம் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பொலிஸ் அணியினர் அண்மையில் தென்மராட்சி பகுதியில் தொடர்ச்சியாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் பலரை அதிரடியாக கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 2 =

*