;
Athirady Tamil News

மணல் கடத்தல் காரர்கள் பொலிஸாரை தாக்க முயற்சி.!!

0

சட்டவிரோத மணல் கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற போது கடத்தல்காரர்கள் பொலிஸாரை தாக்க முயன்றுள்ளனர். இச்சம்பவம் இன்று இரவு ஏழு மணியளவில் தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெற்பேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது. கெற்பேலி கிராமத்தில் வழமை போன்று இன்று மாலை கொடிகாமம் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது சட்டவிரோத மணல் கடத்தல் காரர்கள் உழவியந்திரத்தில் மணல்கடத்தி சென்றுள்ளனர். அவர்களை கொடிகாமம் வழிமறித்துள்ளனர். எனினும் குறித்த கடத்தல் காரர்கள் உழவியந்திரத்தால் பொலிஸாரை தாக்க முற்பட்டுள்ளனர். இதன்போது பொலிஸார் சுதாகரித்துக்கொண்டதையடுத்து உழவியந்திரத்தில் வந்த மணல் கடத்தல்காரர்கள் இருவரும் உழவியந்திரத்தை கைவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதனையடுத்து கொடிகாமம் பொலிஸார் மணலோடு உழவியந்திரத்தை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றுள்ளதோடு தப்பிச்சென்ற கடத்தல்காரர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு முன்னரும் நான்குதடவைகள் கொடிகாமம் பொலிஸார் மணல் கடத்தல்காரர்களை கைது செய்ய சென்ற போது பொலிஸார் தாக்குதல் முயற்சிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 17 =

*