;
Athirady Tamil News

இரணை இலுப்பைகுளம் மக்கள் வைத்தியரை நியமிக்க கோரி ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

0

மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரணை இலுப்பைகுளம் கிராமத்திலுள்ள உள்ள ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்திற்கு நிரந்தரமாக வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு கோரி அப்பகுதி மக்கள் ஆர்பாட்டம் ஒன்றை இன்று (17) முன்னெடுத்தனர்.
வவுனியா மாவட்டத்தின் எல்லை கிராமமான இரணை இலுப்பைகுளம் ஆரம்ப வைத்தியசாலைக்கு முன்பாக கிராம மக்களினால் குறித்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இரணை இலுப்பைக்குளம் கிராமத்து வைத்தியசாலையில் கடந்த ஒரு மாத காலமாக வைத்தியர் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இரணை இலுப்பைக்குளம் கிராமத்தை அண்டிய கிராமத்தை சேர்ந்த மக்களும் இவ் வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். மாதாந்த மருத்துவ சேவையை பெற்றுகொள்ளும் 200 ற்கும் மேற்பட்டோர் வைத்தியர் இல்லாமையின் காரணமாக கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக வைத்தியர் ஒருவர் நியமிக்கபட்டிருந்த போதும் அவர் தற்போது இடமாற்றம் பெற்று சென்றுள்ளார்.

இரணை இலுப்பைக்குளத்தில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது முதல் நிரந்தரமாக ஒரு வைத்தியர் நியமிக்கப்படவில்லை எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம மக்களின் நிலையை கருத்தில் கொண்டு வைத்தியர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக மன்னாரில் இருந்து “இராவணேஸ்வரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 8 =

*