;
Athirady Tamil News

வவுனியா வைத்தியசாலைக்கு நவீன மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு!!

0

வவுனியா பொது வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவிற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவை தளமாக கொண்டியங்கும்’ தமிழர் மருத்துவ அறிஞர்’ நிறுவனத்தின் வேல்ஸ் கிளையால் வவுனியா போது மருத்துவ மனையின் குழந்தைகளிற்கான அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான நவீன மருத்துவ உபகரணங்கள் அண்மையில் வழங்கி வைக்கபட்டது.

உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வில் வவுனியா பொதுமருத்துவ மனையின் உதவி அத்தியட்சகர் வைத்தியகலாநிதி செந்தூர்பதிராஜா, வைத்திய நிபுணர் ஜெயபாலன், தமிழர் மருத்துவ அறிஞர் நிறுவன உறுப்பினரான விபுலேந்திரன், தாதிய பரிபாலகர் மாலா அலோசியஸ், விடுதி சகோதரி உருத்திராதேவி ஆகியோர் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*