;
Athirady Tamil News

இணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழா!! (படங்கள்)

0

இணுவில் அறிவாலய 14ஆம் ஆண்டு விழாவும், புனரமைக்கப்பட்ட நூல்நிலைய திறப்பு விழாவும் – நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் திறந்து வைத்தார்.

இணுவில் அறிவாலயத்தின் 14ஆம் ஆண்டு விழாவும், கலாநிதி. ஆறு.திருமுருகன் மண்டபம் பெயர்ப்பலகைத்திரை நீக்கமும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்பட்ட அறிவாலய நூல்நிலையத்தின் திறப்பு விழாவும் இன்று 16.01.2019 புதன்கிழமை மாலை 05 மணியளவில் இணுவில் அறிவாலயத்தின் தலைவர் செ.சர்வேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் வர்கள் கலந்துகொண்டு நூல்நிலையத்தைத்திறந்து வைத்ததுடன், சிறப்பு விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும், கௌரவ விருந்தினராக கலாநிதி ஆறு.திருமுருகனும் கலந்துகொண்டதுடன் யாழ்.பல்கலைக்கழகத்துணைவேந்தர் பேராசிரியர். விக்கினேஸ்வரன், மற்றும் பேராசிரியர் தேவராஜா ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இணுவில் கந்தசாமி ஆலயத்திலிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட விருந்தினர்கள் மற்றும் மூத்தோர் ஆகியோர் நிகழ்வில் பொன்னாடை போர்த்திக்கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் விருந்தினர்களுடன், மற்றும் ஊரவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × one =

*