;
Athirady Tamil News

வவுனியாவில் கோட்டக்கல்வி அதிகாரிக்கு கௌரவிப்பு நிகழ்வு!! (படங்கள்)

0

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் கோட்டக்கல்வி அதிகாரி எம.;பி நடராஜாவுக்கு கௌரவிப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.
கல்லூரியின் அதிபர் ஐ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜா எதிர்வரும் 21-01-2019 அன்று தனது சேவையிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் நிலையில் அவருக்கான கௌரவிப்பினை வவுனியா இலங்கை திருச்சபை கலவன் பாடசாலை கல்வி சமூகம் வழங்கியிருந்தது.

முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினரும், கோட்டக்கல்வி அதிகாரியுமான எம்.பி.நடராஜா, மாலை அணிவித்து பாண்ட் வாத்தியங்கள் முழங்க பாடசாலை வளாகத்துக்கு அழைத்து வரப்பட்டு பாடசாலை அதிபரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு அவருக்கான நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*