;
Athirady Tamil News

அனுமதியின்றி ஆடு, பனை வெட்டியவர்கள் கைது.!!

0

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கனகம்புளியடிப் பகுதியில் சட்டவிரோதமாக ஆடு ஒன்றை வெட்டி இறைச்சியாக்க முற்பட்டவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை சாவகச்சேரி மடத்தடிப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி பனை மரங்களை தறித்த சந்தேகநபர் ஒருவரையும் சாவகச்சேரி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இக்கைது நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸ்நிலைய உபபொலிஸ் பரிசோதகர் இ.சேந்தன் தலைமையிலான பொலிஸ் அணியினர் மேற்கொண்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*