;
Athirady Tamil News

சர்வதேச வர்த்தக் கண்காட்சி இம்முறை 10ஆவது தடவையாக யாழ்ப்பணத்தில்!!! (படங்கள்)

0

வடக்கின் நுழைவாயில் எனும் தொனிப்பொருளில் வருடாந்திரம் நடைபெற்று வரும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக் கண்காட்சி இம்முறை 10ஆவது தடவையாக யாழ்ப்பணத்தில் நடைபெறுகின்றது.

யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்றைய தினம் (25) முதல் நாளை மறுதினம் (27)ஆம் திகதி வரை மூன்று நாட்கள் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

இக் கண்காட்சி கூடங்களை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் திறந்து வைத்தார்.

பத்தாவது வருடமாக நடைபெறும் இக் கண்காட்சியில் உள்நாட்டு , வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குபற்றி தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தவுள்ளனர். அத்துடன் தொழில் வழிகாட்டல்கள் , கல்வி ஆலோசனைகள் , மருத்துவ பரிசோதனைகள் , மருத்துவ ஆலோசனைகள் பிரதான அம்சங்களாக இடம்பெற்று உள்ளன.

அதேவேளை கண்காட்சியினை பார்வையிடுவதற்கு பாடசாலை சீருடையுடன் வரும் மாணவர்களுக்கு கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது எனவும் , ஏனையவர்களுக்கு 50 ரூபாய் நுழைவு கட்டணமாக அறவிடப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 + twelve =

*