;
Athirady Tamil News

நாடளாவிய ரீதியில் ஒரு வாரகாலம் தேசிய போதை ஒழிப்பு நிகழ்ச்சி செயற்றிட்டம்!! (படங்கள்)

0

தேசிய போதை ஒழிப்பு நிகழ்ச்சி செயற்றிட்டம் – வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்.

தேசிய போதை ஒழிப்பு நிகழ்ச்சித்திட்ட நாடளாவிய செயற்றிட்டத்தின் கீழ் பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிகழ்ச்சிகளில் இன்று 25.01.2019 செவ்வாய்க்கிழமை பாடசாலைகளில் இடம்பெற்ற நிகழ்வுகளில் வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டார்.

யாழ்.இந்துக்கல்லூரி மற்றும், யாழ்.வயாவிளான் மத்திய மகாவித்தியாலயம் மற்றும் யா/கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாசாலை ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்ற நிகழ்வுகளிலேயே வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் பிரதம விருந்தினராகக்கலந்துகொண்டார்

பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சிறப்புச்சொற்பொழிவுகளும் இடம்பெற்ற இந்நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் ஒரு வாரகாலம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 − 1 =

*