;
Athirady Tamil News

சில பிரதேசங்களுக்கு நாளை 24 மணி நேர நீர் வெட்டு !!

0

கொழும்பு புறநகர் பிரதேசங்களுக்கு நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

நாளை (26) காலை 08.00 மணிமுதல் நாளை மறுதினம் (27) காலை 08.00 மணி வரை இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமகம, மீப்பே மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இதன்காரணமாக தேவையான அளவு நீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு பாவனையாளர்களிடம் அந்த சபை கோரிக்கை விடுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + eight =

*