;
Athirady Tamil News

இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கையில் குறைபாடு; திருத்தம் வேண்டும்!!

0

சிங்கப்பூருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த நாட்டு பிரதமர் லீ சியென் லுங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று பகல் இடம்பெற்றுள்ளது.

இரு நாட்டுக்கும் இடையில் வர்த்தக, சுற்றுலா மற்றும் கைத்தொழில் துறையில் காணப்படுகின்ற உறவை மேலும் பலப்படுத்துவது தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளது.

அதேநேரம் இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் சில குறைபாடுகள் இருப்பதாக கூறியுள்ள ஜனாதிபதி அவற்றை சரி செய்ய எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*