;
Athirady Tamil News

நாடு திரும்பினார் ஜனாதிபதி!!

0

இரண்டு நாள் விஜயமாக சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியுள்ளார்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நேற்று இரவு சிங்கப்பூர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்றில் இலங்கையை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்.

சிங்கப்பூரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பிராந்திய சுற்றாடல் அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல்துறை நிறுவனங்களின் தலைவர்கள் மாநாட்டில் முதன்மை உரையை ஆற்றுவதற்காக ஜனாதிபதி அங்கு சென்றிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது அந்த நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடனான சந்திப்பிலும் ஈடுபட்டிருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × three =

*