;
Athirady Tamil News

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்!!

0

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்மாந்துறை நகரத்தில் சொகுசு பஸ் ஒன்றை சோதனையிட்ட போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட வலி நிவாரண மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்மாந்துறை பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கொழும்பில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்த பஸ் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

150 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 15,000 மாத்திரைகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 3 =

*