;
Athirady Tamil News

ஆரோக்கிய உடலுக்கு தண்ணீர் அவசியம்!! (மருத்துவம்)

0

நமது உடலின் பல்வேறு பாகங்களில் அடங்கியுள்ள தண்ணீர் அவைகளின் இயக்கங்களை முறைப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது. இவை தண்ணீரில் கரைந்துள்ள தாதுப்பொருட்கள் மற்றும் விட்டமின் போன்ற திடப்பொருட்களின் இயக்கத்தை ஒழுங்குப்படுத்துகிறது.

மொத்தமாக ஒரே வரியில் சொல்ல போனால் உடம்பின் செயல்பாட்டையே தண்ணீர் தான் முறையாக இயக்கிகொண்டிருக்கிறது. தண்ணீரும் இரசாயனப்பொருட்களும் அவை அனுப்பி வைக்கின்ற அனைத்துமே மூளை இதயம், சீறுநீரகம் மற்றும் நுரையீரல் போன்ற மிக முக்கிய உறுப்புகளை தொடக்கத்திலே சென்றடைகிறதா என்பதை உடலின் அனைத்து பாகங்களிலும் போதிய தண்ணீர் விநியோகம் உறுதி செய்யப்படுகின்றன.

பல்வேறு உறுப்புகளில் சுரக்கின்ற ரசாயனப்பொருட்கள் உடம்பின் தூரத்து உறுப்புகளிலும் சென்று பணியாற்றுகின்றன. இந்த ரசாயனப்பொருட்களை தாங்கள் உற்பத்தி செய்ததை ஒழுங்குபடுத்துவதுடன் தங்களைச் சூழ்ந்திருக்கும் தண்ணீரிலிருந்தும் இதனை வெளியேற்றும்.

நமது உடலில் தண்ணீரின் பங்கு பற்றி தெரிந்துகொள்வோம்.

உடலின் உட்புறத்து அவயங்களின் மேலான கோடுகளில் உள்ள ஈரப்பசையை அப்படியே நிர்வகித்து வர தண்ணீர் உதவுகின்றது. ரத்தம் மற்றும் நீணநீர் போன்ற திரவங்களின் வழக்கமான அளவு மாற்றுத்திறன் ஆகியவற்றை நிர்வகிக்கின்றன. உடம்பின் உஷ்ணநிலையை சமச்சீராக்க உதவுகின்றது.

அது உடம்பிலுள்ள சிறுநீர் வியர்வை, மற்றும் மூச்சுக்காற்று ஆகியவற்றில் காணப்படும் விஷத்தன்மை அல்லது போதை ஆகியவற்றை வெளியேற்றிவிடும். தோலின் அமைப்பையும் அதன் செயல்பாட்டையும் சரியாக ஒழுங்குபடுத்துவதற்கு தண்ணீர் இன்றிமையாததாகும்.

உடம்பு ஒரு நாள் ஒன்றிற்கு நான்கு லிட்டர் தண்ணீரை இழக்கின்றது. எனவே இதனைச் சரிக்கட்ட குறைந்தபட்சம் இதேயளவு தண்ணீரை தினசரி நாம் எடுத்தாக வேண்டும். போதிய அளவு தண்ணீர் உடம்பில் செலுத்தாவிட்டால் அது ஈரப்பசையில்லாது உலர்ந்து போய்விடும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 1 =

*