;
Athirady Tamil News

வெளிச்சம் அறக்கட்டளையின் மூலம் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

0

எமது வேண்கோளுக்கு அமைவாக வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலர் திரு. S.S.ஸ்ரீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டில் #சிவானந்தன் நற்பணி மன்றத்தின் மூலம் திருமதி. தவராணி சிவானந்தன் அம்மையார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாக நோர்வேயில் வசிக்கும் மகன் சுரேஷ் சிவானந்தன் அவர்களின் நிதி பங்களிப்பில் வவுனியா தரணிக்குளம் 18ம் ஒழுங்கையில் கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் அன்றாடம் ஒரு வேளை கூட தனது வீட்டில் சமைத்து சாப்பிட வசதியில்லாமல் அயலவர்களின் உதவியுடன் தனது வாழ்க்கையினை வாழ்ந்துந்து வரும் ஒரு பெண்தலைமைத்துவ குடும்பத்திற்கு தற்போதைக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள் 26-01-2019 அன்று வெளிச்சம் அறக்கட்டளையின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலர் திரு S.S. ஸ்ரீனிவாசன், வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் திரு.பா.லம்போதரன், அபிவிருத்தி அலுவலர் திரு கிறிஷ்வசந், தரணிதீபம் விளையாட்டுக்கழக இளைஞர்கள் எனப்பலரும் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + thirteen =

*