;
Athirady Tamil News

நீட்-ஜேஇஇ தேர்வுகளை எதிர்கொள்ள டெல்லி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி..!!

0

சமூக மாற்றத்திற்கான பல்வேறு நடவடிக்கைகளை டெல்லி அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லியில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக கேரியர் லாஞ்சர் எனும் போட்டித் தேர்வுகளுக்காக பயிற்சி அளிக்கும் மையத்துடன் டெல்லி அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

அதன்படி அறிவியல் பாடப்பிரிவின் கீழ் பயிலும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கி உள்ளன. இதேபோல் அரசாங்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

இது குறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தனது டுவிட்டர் பக்கத்தில், மாணவ மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் குறித்து கூறி உள்ளார்.

மேலும், 2015ல் இருந்து ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளில் தேர்வானவர்களின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதற்கு டெல்லி அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கடின உழைப்பே காரணம் எனவும் மணிஷ் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 21-ம் தேதி இந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கின. தினமும் பள்ளி நேரம் முடிந்த பிறகு 7 மணி முதல் 10 மணி வரை மொத்தம் 130 மணி நேரம் நான்கு பாடப்பிரிவுகளில் (கணிதம், உயிரியியல், வேதியியல், இயற்பியல்) மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four − 4 =

*