;
Athirady Tamil News

சிறிபாத தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வகுப்பிற்க்கு செல்லாது எதிர்ப்பு!! (படங்கள்)

0

பத்தனை சிறிபாத தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வகுப்பிற்க்கு செல்லாது கல்லூரியின் வளாகத்தில் எதிர்ப்பு நடவடிக்கை

பத்தனை சிறிபாத தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்கள் வகுப்பிற்க்கு செல்லாது கல்லுhரியின் வளாகத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளனர் இந்த எதிர்ப்பு நடவடிக்கை 06.02.2019.புதன் கிழமை காலை முதல் முன்னெடுக்கபட்டதாக தெரிவிக்கபடுகிறது.

05.06.2019.செவ்வாய்கிழமை மாலை பத்தனை சிறிபாத தேசிய கல்வியற் கல்லூரி மாணவர்களுக்கு கல்லுரியின் சமையல் அறையில் சமைக்கபடும் உணவூ சுத்தமாக சமைக்கபடாமல் வழங்கபடுகின்ற சம்பவம் குறித்து கல்லுரியின சமையல் அறைக்கு சில் வைக்கபட்ட பிறகு குறித்த மாணவர்களுக்கு முறையாக உணவூ கிடைக்கபெறாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் 05.02.2019.புதன்கிழமை இரவூ கல்லுரியின் உத்தியோகத்தர்கள் சிலர் கல்லுரியின் உள்ளே மதுபானம் அருந்துவதை இனங்கண்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்றய தினம் கல்லூரி
மாணவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எனவே தங்களுக்கு வழங்கபடுகின்ற உணவூம் சுத்தமாகவூம் முறையாகவூம் வழங்கபட வேண்டும் அது மட்டும் இன்றி கல்லுhரியில் மதுபான அருந்தியவர்களுக்கு எதிராக கல்லாரியின் பீடாதிபதி உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவூம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட கல்லுhரி மாணவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பத்தனை தேசிய சிறிபாத கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி ரமனி அபேநாயக்க அவர்களிடம் தொடர்பு கொண்டு வினவியபோது இந்த சம்பவம் தொடர்பில் எனக்கு தனிச்சயான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள முடியாது இந்த பிரச்சினைக்கு உயர் அதிகாரிகளின் ஊடாக நடவடிக்கை எடுக்கபடும் என அவர் மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 8 =

*