;
Athirady Tamil News

தோட்ட தொழிலாளர்களை காட்டி கொடுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்யூமாறு ஆர்பாட்டம்!! (படங்கள்)

0

தோட்ட தொழிலாளர்களை காட்டி கொடுத்த ஒப்பந்தத்தை இரத்து செய்யூமாறு கோறி வட்டவலையில் ஆர்பாட்டம்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் புதிய கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்யூமாறு கோறி வட்டவலை லொனோக் தோட்ட தொழிலாளர்களால் 06.02.2019.புதன்கிழமை காலை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது இந்த ஆர்பபாட்டத்தின் போது தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ருபாவினை பெற்று தருவதாக கூறி இருதியில் கூட்டு ஒப்பந்தத்தில் 700ருபாவிற்க்கு கைச்சாதிட்ட தொழிற்சங்கங்கள் கைச்சாதிடபட்ட கூட்டு ஒப்பந்தத்ததை இரத்து செய்து எங்களுக்கு ஆயிரம் ருபா அடிப்படை சம்பளத்தை பெற்று தரவேண்டும் என வழியூருத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டமானது வட்டவலை லொனக் தோட்டபகுதியில் உள்ள கொழுந்து மடுவத்திற்க்கு முன்பாக முன்னெடுக்கபட்டது இந்த ஆர்பாட்டம் காலை 08மணி முதல் 11மணிவரை இடம் பெற்றதோடு இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் மலையக அரசயில்வாதிகள் எம்மை ஏமாற்றாதே ஆயிரம் ருபா அடிப்படை சம்பளம் வேண்டும் என்ற பாதாதைகளை ஏந்தியூம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோட்ட தொழிலாளர்களாகிய நாங்கள் உங்களுக்கு வாக்களித்தோம் எங்களுக்கு சம்பளத்தை பெற்று கொடுப்பதற்காக ஆனால் எங்கள் வாக்குகளை பெற்ற மலையக அரசியல்வாதிகள் எங்கள் சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனத்தோடு எங்களைஅடகு வைத்துவிட்டார்கள் ஆகையால் மாதாந்தம் தோட்ட தொழிலாளர்களாகிய நாங்கள் தொழிற்சங்கங்களுக்கு செலுத்தகின்ற சந்தா பணத்தை இனிமேலும் வழங்க போவதில்லை எனவூம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மேலும் தெரிவித்தனர்.

மலையக அரசியல்வாதிகளுக்கு எங்களுடைய அடிப்படை சம்பளம் ஆயிரம் ருபாவை பெற்று கொடுக்க முடியாவிட்டால் எந்த ஒரு அரசியல்வாதிகளும் தோட்ட தொழிலாளர்களின் வீடுகளை நாடி வாக்கு கேட்டு வரவேண்டாம் எனவூம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமக்கள் மேலும் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − three =

*