;
Athirady Tamil News

புலோலி கலாச்சார மத்திய நிலையத்தில் புதிய யோகாசன பயிற்சி ஆரம்பம்!

0

கடந்த ஆண்டு (2018) தைப்பூச நன்னாளில் ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டை பூர்த்தி செய்துள்ள புலோலி கலாச்சார மத்திய நிலையத்து யோகாசனத்தில் மீண்டும் எதிர் வரும் சனிக்கிழமை (09.02.2019) முதல் புதிய பிரிவு ஆரம்பிக்கப்படுகிறது. இணைய விரும்புவோர் அன்றைய தினம் காலை 6.15 இற்கு வருகை தரும்படி வேண்டப்படுகின்றனர். இது சனிக்கிழமை தோறும் காலை 6.30 முதல் 7.30 வரை தொடரும். வயது, பால், பிரதேச வேறுபாடுகள் இல்லை. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

இங்கு வருகை தரும் வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தைச் சேர்ந்த மருத்துவரும் யோகாசன பயிற்றுவிப்பாளருமான மருத்துவ அதிகாரிகளிடம் உங்கள் தேவைக்குரிய ஆசனத்தை அல்லது குறித்த நோய்த்தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கு ஏதுவாக அமையக்கூடிய ஆசனத்தை கேட்டு பயில முடியும் என்பதோடு எவ்வித கடடணங்களும் அறவிடப்படுவதில்லை என்பது வரப்பிரசாதமாகும்.
கடந்த ஒரு வருடமாக மருத்துவர் திரு.பாலசுப்பிரமணியம் பிரபாகரன் அவர்கள் தனது உதவியாளருடன் போதனையில் ஈடுபட்டு வந்தார். மாணவர்கள் உட்பட பெருமளவு பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். இரண்டாவது ஆண்டில் இப்பணியை மருத்துவர் திரு.கணபதிப்பிள்ளை ஐங்கரன் அவர்கள் தலைமையிலான மருத்துவர் குழுவினர் தொடர உள்ளனர்.

யோகாசனப் பயிற்சிக்கு வேண்டிய இடவசதியை கலாச்சார மத்திய நிலையத்தில் ஏற்படுத்துவதற்கான எமது வேண்டுகோளை ஏற்று, பருத்தித்துறை பிரதேச செயலர் திரு. ஆழ்வாப்பிள்ளை சிறி அவர்களும் கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரி திரு.ஜெ.கிரிதரன் அவர்களும் கலாச்சார அமைச்சுடன் தொடர்புகொண்டு ஏற்படுத்தி தந்துள்ளனர்.

யோகாசன பாய்களுக்கான பங்களிப்பை Dr.ப.ரகுபதி(U.K.) அவர்களும் திரு.சு.தனபாலசுந்தரம்(U.S.A.) அவர்களும் வழங்கியதுடன் யோகாசன அறிவிப்புத் தட்டி நிறுவுதற்கான பங்களிப்பை திரு.திருமதி கந்தரூபன் அகிலா (U.S.A.) குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.

இவை யாவற்றையும் திட்டமிட்டு நெறிப்படுத்தும் புற்றளை யோக பாடசாலை, புற்றளை சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபையின் ஓர் அங்கமாக 2016 ஆவணியில் தொடக்கப்பட்டு புற்றளை ஆலயத்தில் பொது மக்களுக்கான யோகாசனத்தை நடத்தியதோடு, பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பல யோகாசன வேலைத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதன் வெற்றிக்கு யோக பாடசாலையின் இணை இணைப்பாளர் திரு.வீ.கிருஷ்ணரூபன் மற்றும் பரிபாலன சபை செயலர் திரு.ச.கணேசலிங்கம் ஆகியோரின் களப்பணிகள் இன்றியமையாதிருந்து வந்துள்ளன.

மருத்துவ யோகாசன பயிற்றுவிப்பாளர்களை வழங்கி உதவும் சுதேச மருத்துவ திணைக்களத்திற்கும், இதன் நிறைவேற்றத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உழைக்கும் அனைவர்க்கும் புற்றளை யோக பாடசாலையும் பயனாளிகளும் நன்றியுடையோம்.

இன்றைய உலகில் எமது பாரம்பரிய யோகாசன கலையின் சிறப்பு பெரிதும் உணரப்பட்டு, வளர்ந்த நாடுகளில் பெரும் வரவேற்பை பெறும் நிலையில், நம்மவர்களும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பயன் பெற வேண்டும் என்பதே எமது அவா. மேலதிக தகவல்கள் தேவைப்படின் 0779810961, 0773547181 எனும் எங்களுடன் தொடர்பு கொண்டு தெளிவாக்கிக்கொள்ளலாம்.

திரு.பு.வேலவகுமார்.
இணை இணைப்பாளர்
புற்றளை யோக பாடசாலை
புலோலி
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*