;
Athirady Tamil News

தூய சக்தி மற்றும் சுகாதார பிரயோக பன்னாட்டு மாநாடு!! (படங்கள்)

0

தூய சக்தி மற்றும் சுகாதார பிரயோக பன்னாட்டு மாநாடு யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இன்று ஆரம்பமானது.

யாழ்ப்பாண பல்கலைக் கழகமும் நோர்வே பல்கலைக்கழகமும் இணைந்து பெற்றுக் கொண்ட நிதியுதவியுடன், இரண்டு நாடுகளுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கைகள் மற்றும் ஆய்வு பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த மாநாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் ,மாணவர்கள் மற்றும் நோர்வே நாட்டுப் பல்கலைக் கழகப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மூன்று நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 300 ஆய்வாளர்கள், 184 ஆய்வு கட்டுரைகள்,140 ஆய்வு சுருக்கங்கள் என்பன சமர்பிக்கப்பட்டு விளக்கவுரைகள் இடம்பெறவுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 3 =

*