;
Athirady Tamil News

வெளிச்சம் அறக்கட்டளையின் வேண்டுகோளுக்கு அமைவாக துவிச்சக்கர வண்டி!! (படங்கள்)

0

வெளிச்சம் அறக்கட்டளையின் வேண்டுகோளுக்கு அமைவாக வவுனியா மாவட்ட சமூக சேவை அலுவலர் திரு. எஸ்.எஸ்.ஸ்ரீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டில் தவநடராஜாமலர் நற்பணி மன்றத்தின் மூலம் கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் இலண்டனில் வசிக்கும் பொறியியலாளருமான திரு. நடராஜா இரவிக்குமார் அவர்களினால் வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தில் மிகவும் வறுமையில் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்து கொண்டு தனது கல்வியை இடைநிறுத்தாது 3km தூரம் சென்று ஓமந்தை மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் அ.சதுர்ஜா அவர்களுக்கு துவிச்சக்கர வண்டி 02-02-2019 அன்று வெளிச்சம் அறக்கட்டளையின் ஊடாக வழங்கி வைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் பொறியியலாளர் கிருபானந்தன் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த சற்குணராஜா சசிதரன் மற்றும் வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் திரு.பா.லம்போதரன், மாவட்ட சமூக சேவை அலுவலகர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாசன், அபிவிருத்தி அலுவலகர் திரு.வசந்தரூபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + five =

*