பிரபல பாடகரின் வீடுகளில் விசேட அதிரடி படையினர் இன்று சோதனை!!

டுபாயில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த பிரபல பாடகரின் வீடுகளில் விசேட அதிரடி படையினர் இன்று (வியாழக்கிழமை) சோதனை நடத்தியுள்ளனர்.
கடந்த 5 ஆம் திகதி டுபாயில் சட்டத்துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது பாதாள உலகக் குழு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் முக்கிய சந்தேகநபரான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 25 பேர் கைதுசெய்யபட்டனர்.
அவர்களில் இலங்கையை சேர்ந்த பிரபல பாடகர் அமல் பெரேரா ஒருவராவார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான வீடுகளில் விசேட அதிரடி படையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
இதன் போது அங்கிருந்து கொக்கேயின் பாவிப்பதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ரயன் வேன் ரோயனின் வீட்டில் இருந்து இலத்திரனியல் தராசு ஒன்றும் வீட்டில் வீட்டில் மறைவான பகுதி ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”