;
Athirady Tamil News

கணவனை திட்டம் போட்டு கொலை செய்த மனைவி..!!

0

அமெரிக்காவில் கணவனை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அங்கிருந்த கணவனின் உறவினர்கள் கண்ணீர் விட்ட சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த தம்பதி Denise Williams(49)-Mike Williams.

இந்த தம்பதி கடந்த கடந்த 1994-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், Mike Williams கடந்த 2000-ஆம் ஆண்டு மர்மமான முறையில் இறந்து, எரிக்கப்பட்டு கிடந்தார்.

Mike Williams மரணத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு சந்தேகம் இருந்ததால், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதன் பின் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து வந்த நிலையில், அவரை கொலை செய்தது அவரது மனைவி Denise Williams தான் என்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால், பொலிசார் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்திய போது, Mike Williams-ன் நெருங்கிய தோழனான Brian Winchester-க்கும் Denise Williams-க்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது

Mike Williams உயிரோடு இருந்தால், நிச்சயமாக இருவரும் சந்தோஷமாக இருக்க முடியாது என்பதால், அவரை தீர்த்து கட்ட இருவரும் முடிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி மைக்வில்லியம்சனுக்கு 1.75 மில்லியன் டொலர் இன்ஸ்சுரன்ஸ் இருந்துள்ளது.

அவர் இறந்துவிட்டால், அந்த இன்சுரன்ஸ் பணமும் கிடைத்துவிடும் அதைக் கொண்டு இருவரும் வேறு எங்காவது சென்று செட்டில் ஆகிவிடலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

இதனால் திட்டமிட்ட படி Denise தன் கணவனை கப்பல் சவாரி ஒன்றில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது கணவனை நடு ஆற்றில் தள்ளிவிட்டு, அதன் பின் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார்.

அதன் பின் அவரின் உடலை 2017-ஆம் ஆண்டு எரித்துள்ளனர்.

இதையடுத்து கணவனை திட்டம் போட்டு கொலை செய்த Denise Williams-க்கு கடந்த புதன் கிழமை வழக்கை விசாரித்து வரும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அவர் அடுத்த 30 ஆண்டுகள் பரோலிலும் வெளியில் வர முடியாத அளவிற்கு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அங்கிருக்கும் ஊள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த காதலனின் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்தப்படவுள்ளது.

நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவிக்கும் போது, அங்கிருந்த Mike Williams-ன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர்விட்டு அழுதனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி பார்ப்போரையும் கண்கலங்க வைக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × five =

*