;
Athirady Tamil News

மாணவர்கள் உயிருடன் விளையாடிய பள்ளி பஸ் டிரைவர் கைது..!!

0

மும்பை கார் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இன்டர்நேஷனல் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இந்த பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் மாணவர்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். ராஜ்குமார் (வயது 22) என்பவர் பஸ்சை ஓட்டிச்சென்றார். முன்னால் சென்ற தொழில் அதிபர் ஒருவரின் சொகுசு கார் மீது பஸ் மோதியதால், கார் சேதம் அடைந்தது. பஸ்சில் இருந்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தொழில் அதிபர் பஸ் டிரைவர் ராஜ்குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுபற்றி அறிந்ததும் அங்கு வந்த போலீசார் பஸ்சுக்குள் சென்று பார்த்தபோது, கியர் பாக்ஸ் லிவர் இருக்கும் இடத்தில் மூங்கில் கம்பு வைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கியர் பாக்சில் மூங்கில் கம்பை வைத்து பஸ்சை ஓட்டி, மாணவர்களின் உயிருடன் விளையாடிய ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். 3 நாட்களுக்கு முன்பு கியர் பாக்ஸ் லிவர் உடைந்து விட்டதாகவும் அதனால் மூங்கில் கம்பை சொருகி பஸ்சை ஓட்டிவந்ததாகவும் அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 13 =

*