;
Athirady Tamil News

தம்புள்ளையில் ஏ9 வீதியினூடான போக்குவரத்துக்கு பாதிப்பு !!

0

தம்புள்ளை, பனாம்பிட்டிய பிரதேசத்தில் ஏ9 வீதியினூடான போக்குவரத்து தற்போது முற்றாக தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

அப்பிரதேசத்தில் மக்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இரண்டு மாத காலமாக குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் தரம் 05 இற்கு கற்பிக்க ஆசிரியர் ஒருவர் இல்லாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும் பெற்றோர்களும் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பிரதேசத்தில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*