;
Athirady Tamil News

ஆடி­ய­பா­தம் வீதி­யில் உள்ள மரக்­காலை சம்பவம்; நீதிமன்றத்தில் சாட்சியம்!!

0

யாழ்ப்­பா­ணம் நல்­லூர் ஆடி­ய­பா­தம் வீதி­யில் மரக்­கா­லை­யில் வேலை செய்­யும் நபரைத் தாக்க முற்­பட்­டார் என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டும் சந்­தே­க­ந­பர்­கள் கையில் ஆயு­தம் வைத்­தி­ருந்­த­தைக் காண­வில்லை என்று சாட்சி ஒரு­வர் யாழ்ப்­பாணம் நீதி­வான் மன்­றில் நேற்­றுச் சாட்­சி­ய­ம­ளித்­தார்.

ஆடி­ய­பா­தம் வீதி­யில் உள்ள மரக்­காலையில் வேலை செய்­யும் இளை­ஞனை இனந்­தெ­ரி­யாத கும்­பல் தாக்க முற்­பட்­ட ­போது, இளை­ஞன் அவர்­க­ளி­ட­மி­ருந்து தப்பி ஓடி­ய­போது கிணற்­றில் வீழ்ந்­துள்­ளார். பின்­னர் ஊர­வர்­க­ளால் காப்­பாற்­றப்­பட்­டி­ருந்­தார். இந்­தச் சம்­ப­வம் கடந்த செப்­ரெம்­பர் மாதம் இடம்­பெற்­றி­ருந்­தது.

தாக்க முற்­பட்­ட­னர் என்ற சந்­தே­கத்­தில் 4 இளை­ஞர்­கள் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். அவர்­க­ளி­ட­மி­ருந்து கத்தி போன்ற ஆயு­தம் ஒன்றை மீட்­டி­ருந்­தோம் என்­றும் குற்­றஞ்­சாட்­டிக் கோப்­பாய் பொலி­ஸார் வழக்­குத் தாக்­கல் செய்­தி­ருந்­த­னர்.

யாழ்ப்­பாண நீதி­வான் மன்­றில் நீதி­வான் ஏ.எஸ்.பி.போல் முன்­னி­லை­யில் வழக்கு விசா­ரணை நேற்று நடை­பெற்­றது.முறைப்­பாட்­டா­ளர் தனது சாட்­சி­யத்­தில் தெரி­வித்­த­தா­வது:

ஆடி­ய­பா­தம் – நல்­லூர் வீதி­யில் உள்ள மரக்­கா­லை­யில் நின்­றி­ருந்த போது சில நபர்­கள் என்­னைத் தாக்­கு­வது போல வந்­த­னர். நான் தப்பி ஓடும்­போது அயல் வீடு ஒன்­றின் மதில்­மேல் ஏறிப் பாய்ந்தே ஓடி­னேன். அதன்­போது எதிர்­பா­ராத வித­மாக மரக்­கா­லைக்கு அரு­கில் இருந்த கிணற்­றுக்­குள் தவறி வீழ்ந்­து­விட்­டேன்.

காப்­பாற்­று­மாறு கூக்­கு­ர­ லிட்­டேன். முத­லா­வது சந்­தே­க­ந­பர் நான் வீழ்ந்து கிடந்­த­மையை எட்­டிப்­பார்த்­தார். பின்­னர் அங்கு ஒன்று கூடிய ஊர்­மக்­கள் என்­னைக் கிணற்­றி­லி­ருந்து மீட்­ட­னர். மீட்­கும்­போது ஊர்­மக்­க­ளு­டன் பொலி­ஸா­ரும் நின்­றி­ருந்­த­னர்.

என்னை விரட்­டி­ய­வர்­களே கிணற்­றுக்­குள் வீழ்ந்­த­தும் எட்­டிப்­பார்த்­த­னர் என் நான் நினைத்­தேன்” என்று சாட்­சி­யம் அளித்­தார்.சந்­தேக நபர்­கள் சார்­பில் குறு க்கு விசா­ரணை நடத்­திய சட்­டத்­த­ரணி மு.ரெமீ­டி­யஸ்,

மரக்­கா­லைக்­கும் கிணற்­றுக் கும் இடை­யில் எவ்­வ­ளவு தூரம்?. வந்­த­வர்­களை நீங்­கள் அடை­யா­ளம் கண்­டீர்­களா?. கிணற்­றில் இருந்து மீட்­கப்­ப ட்­ட­தும் அவர்­களை கண்­டீர்­களா?. பொலி­ஸார் உங்­களை எப்­படி அழைத்­துச் சென்­ற­னர்?. அழைத்­துச் செல்­லும்­போது சந்­தே­க­ந­பர்­கள் ஆயு­தம் ஏதா­வது வைத்­தி­ருந்­த­னரா? என்று கேட்­டார்.அதற்­குச் சாட்­சி­ய­ம­ளித்த அவர்:

மரக்­கா­லைக்­கும் கிணற்­று க்­கும் இடையே 100 மீற்­றர் தூரம். என்னை கலைத்­த­வர்­களை நான் சரி­யாக அப்­போது பார்க்­க­வில்லை. கிணற்­றுக்­குள் வீழ்ந்­த­போது முத­லா­வது சந்­தேக நபர் மட்­டுமே என்னை எட்­டிப்­பார்த்­தார். நான் கிணற்­றில் இருந்து மீட்­கப்­பட்­ட­போது முத­லா­வது சந்­தேக நபர் உட்­பட ஏனைய நபர்­களை நான் சம்­பவ இடத்­தில் காண­வில்லை.

என்­னைப் பொறுப்­பேற்ற பொலி­ஸார் சில­மணி நேரத்­தி­லேயே தமது வாக­னத்­தில் ஏற்றி பொலிஸ் நிலை­யம் அழைத்துச் சென்­ற­னர். கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்­க­ளைப் பொலிஸ் நிலை­யத்­தில் கண்­டேன். அவர்­களை இந்த வழக்­குக்கு முன்­னர் பார்த்­த­தும் இல்லை, பழக்­க­மும் இல்லை. எனது நண்­பர்­க­ளுக்­கும் இன்­னொரு தரப்­பி­ன­ருக்­கும் அன்யைய தினம் நல்­லூர் பகு­தி­யில் முரண்­பாடு ஏற்­பட்­டி­ருந்­தது.

நான் நண்­பர்­க­ளு­டன் நின்­ற­போ­தும் முரண்­பாடு நடை­பெ­றும்­போது நான் அங்கு இருக்­க­வில்லை. அந்த முரண்­பாட்டை நான் அறிந்­த­மை­யால்­தான் என்­னைத் தாக்க வரு­கின்­ற­னரோ என்ற அச்­சத்­தில் மதில் பாய்ந்து ஓடி­னேன்.-என்று சாட்­சி­ய­ம­ளித்­தார்.

வழக்கு தொடர் சாட்­சி­யத்­துக்­காக எதிர்­வ­ரும் மார்ச் மாதம் 21 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 19 =

*