;
Athirady Tamil News

கடமை நேரத்தில் கஞ்சாவுடன் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

0

கடமை நேரத்தில் கஞ்சாவுடன் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று அனுராதபுரம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், விடுமுறை எடுக்காமல் தனது கடமை நேரத்தில் தனது சொந்த ஊரான அனுராதபுரத்துக்கு நேற்று சென்றுள்ளார். கடமையில் இவர் இல்லாததை அறிந்த சக பொலிசார் தேடியுள்ளனர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பான இரகசிய தகவலின் அடிப்படையில் அவர் அனுராதபுரத்தில் இருப்பதை பொலிஸார் அறிந்துள்ளனர். அதனடிப்படையில் குறித்த நபரை தேடிச்சென்ற அனுராதபுரம் பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். அவர் உடமையில் கஞ்சா வைத்திருந்த போது அதையும் போலிசார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 5 =

*