;
Athirady Tamil News

துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

0

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் நெடுந்தீவிலுள்ள பதினேழு குடும்பங்களுக்கு சுயதொழில் மேற்கொள்ளுவதற்கும் பாடசாலை செல்லும் மாணவர்களுக்குமாக பதினேழு துவிச்சக்கர வண்டிகளை இன்று (08.02.2019) நெடுத்தீவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காரியாலயத்தில் வைத்து வழங்கி வைத்தார்.

குறித்த நிகழ்வில் நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் பற்றிக் றொசான், நெடுந்தீவு பிரதேசசபை உறுப்பினர் சிந்தைகுலநாயகி அனுசாந்தன், கட்சி உறுப்பினர் அருள்ஜீவன், சமூக ஆர்வலரும் பிரித்தானியாவில் வசிப்பவருமான தர்மலிங்கம் மணிபல்லவன் ஆகியோர் கலந்து சிறப்பித்து,
ரூபா இரண்டு இலட்சத்து அறுபத்தி மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் பெறுமதியான பதினேழு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தனர்.
நிகழ்வின் பதிவுகளைப் படங்களில் காணலாம்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − ten =

*